தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன். மாஸ் ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனிடம் பேசுவது என்பது எப்போதுமே மிகப்பெரிய எனர்ஜி பூஸ்டர். சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த உரையாடலிலிருந்து...
`` ‘ஹீரோ’ படம் எப்படி ஆரம்பமாச்சு?’’
``10 வருஷத்துக்கு முன்னாடி அட்லி எடுத்த `முகப்புத்தகம்’ குறும்படத்தில் நடிச்சேன். அப்போ `என்னுடைய ஃபிரெண்ட் மித்ரன் ஷார்ட் பிலிம் பண்றார், நடிக்கிறீங்களா?’ன்னு கேட்டார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ். இப்படித்தான் எனக்கு இயக்குநர் மித்ரனைத் தெரியும். அப்புறம் அவரோடு ‘சினம்’னு ஒரு ஷார்ட் பிலிம் பண்ணினேன். மித்ரன் இயக்கம், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் கேமரா, அல்போன்ஸ் புத்திரன் எடிட்டிங்னு செம சூப்பர் டீம் அது. ‘இரும்புத்திரை’ பட ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்தப்போ நானும் அங்கதான் `சீமராஜா’ ஷூட்டிங்ல இருந்தேன். அப்ப மித்ரன், ஜார்ஜை மட்டும் தனியா மீட் பண்ணினேன்.
`இரும்புத்திரை ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. அடுத்த படத்துல நீங்க நடிக்கிறீங்களா?’னு ஜார்ஜ் கேட்டார். தாராளமாப் பண்ணலாம்னு சொன்னேன். இதுவரைக்கும் தொடாத ஒரு ஏரியாவுல படம் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். ஆபீஸ் போகும்வரைக்கும் என்னமாதிரியான படம்னு யோசிச்சுட்டிருந்தேன். ஆபீஸ் போனபிறகு, `என்ன மாதிரி படம் ப்ரோ’ன்னு அவர்கிட்ட கேட்டேன். உடனே `சட்டத்தைக் கையில் எடுக்குற Vigilante மாதிரி ஒரு படம்’னு சொன்னார். `நீங்க நம்ப மாட்டீங்க, நானும் இதுமாதிரிதான் யோசிச்சிட்டே வந்தேன்’னு சொன்னேன். இன்றைய சூழலுக்கும், என்னோட இமேஜுக்கும் செட் ஆகுற மாதிரி யோசிச்சுப் பண்ணுன படம்தான் `ஹீரோ.’ ’’
``கல்வித் திட்டம், கார்ப்பரேட் அரசியல் குறித்துதான் ‘ஹீரோ’ படத்தில் பேசப்போகிறாரா?’’
``ஹீரோ கல்வித் திட்டத்தை மாத்துறான்ங்கி றதைத் தாண்டி, இப்போ படிக்கிற மாணவர்களுக்கு என்ன தேவைங்கிறதைப் படத்துல சொல்லியிருக்கோம். இதைக் கமர்ஷியலாவும், சர்வதேசத் தரத்திலும் கொடுக்க ட்ரை பண்ணியிருக்கோம்.’’
``சூப்பர் ஹீரோ படங்களில் மிக முக்கியமானது அந்த சூப்பர் ஹீரோவின் காஸ்ட்யூம். இந்த உடையை, இந்த மாஸ்க்கை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?’’
``படத்துல அந்த மாஸ்க்குக்கான காரணம் ஒரு எமோஷனோட இருக்கும். இந்த சூட் டிசைன் பண்ணுனதுதான் ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம். பொதுவா சர்வதேச சூப்பர் ஹீரோ படங்கள்ல ரெக்ஸின் மாதிரிதான் அந்த உடை இருக்கும். ஆனா, இந்தப் படத்துல நம்ம ஊர் கனெக்ட் இருக்கும். இந்த உடைல குட்டிக் குட்டி டீடெய்ல்ஸ் நிறைய இருக்கு. கிட்டத்தட்ட 15 டிசைனுக்கு மேல போய்தான் இந்த டிசைன் ஓகே ஆச்சு. ஷூட்டிங் முடிஞ்சதும் அந்த மாஸ்க்கையும், சூட்டையும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன். பாப்பா அதைப் பார்த்ததும் ரொம்பவே குஷி ஆகிட்டாங்க. `இது உங்க முகத்துக்கு கரெக்ட்டா இருக்கு. என்னுடைய முகத்துக்கும் ஒண்ணு பண்ணிக் கொடுங்கப் பா’ன்னு கேட்டிருக்காங்க.”
‘`சூப்பர் ஹீரோ படத்துல ஹீரோயினுக்கு என்ன ரோல்?’’
``கல்யாணி பிரியதர்ஷனுக்கும் எனக்கும் பெருசா ஹீரோ - ஹீரோயின் செக்மன்ட்னு தனியா எதுவும் இருக்காது ஆனா, படம் முழுக்க அவங்க வருவாங்க. படத்தின் வில்லன் அபேய் தியோல். பாலிவுட்ல ரொம்ப நல்ல நடிகர். அவர் நடிச்ச `தேவ் டி’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். அர்ஜுன் சாரோட எனக்கு இது முதல் படம். படத்துல ரொம்பவே பாசிட்டிவான ரோல் பண்ணியிருக்கார்.
சூப்பர் ஹீரோ
சூப்பர் ஹீரோ
அவருடைய குரல் பயங்கர பவர்ஃபுல். இந்தப் படத்துல சிறப்பான ஷாட்ஸ் வைக்க ஜார்ஜ் ப்ரோ, ஸ்டன்ட்டுக்கு திலீப் மாஸ்டர், எடிட்டிங்குக்கு ரூபன், இசைக்கு யுவன் சார்னு டெக்னிக்கலா ஒரு சூப்பர் டீம் வேலை பார்த்திருக்கு. படத்துல குட்டிப் பசங்க நாலுபேர் ரொம்ப முக்கியமான ரோல் பண்ணியிருக்காங்க. படத்துல ரொம்பவே குறைவான காமெடிதான். அதுமட்டுமல்லாம நிறைய ஆக்ஷன் போர்ஷன்ல நான் நடிச்சிருக்கிற முதல் படம்னா அது `ஹீரோ’தான்.’’
`` ‘இன்று நேற்று நாளை ’ இயக்குநர் ரவிக்குமாருடன் நீங்கள் பண்ணும் படம் இப்ப என்ன நிலையில இருக்கு?’’
``தயாரிப்புரீதியா சில சிக்கல்கள் வந்துச்சு. ஆனா, மெல்ல மெல்ல சரியாகிட்டு வருது. என்னுடைய கரியர்ல ரொம்பப் பெரிய பட்ஜெட் படம் இது. பெரிய சிக்கல்கள் வந்தாலும் விடாம முயற்சி பண்றதுக்கான காரணம், தரத்தில் எந்தக் குறையுமில்லாமல் படம் வெளிவரவேண்டும் என்பதால்தான்.
இந்தப் படத்துக்காக எனக்கு சம்பளம்கூட வேண்டாம்னு சொல்லிட்டேன். 75 சதவிகித படப்பிடிப்பு முடிஞ்சிடுச்சு. ஜனவரியில் மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவோம்.’’
``ரவிக்குமார் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை... என்ன ஸ்பெஷல்?”
‘`ஹீரோவா படத்துல நடிக்க ஆரம்பிச்ச சமயம் எனக்கு சில ஆசைகள் இருந்தது. ஷங்கர் சார் படத்துல நடிக்கணும்னு நிறைய இடங்கள்ல சொல்லியிருக்கேன். அடுத்ததா ரஹ்மான் சார் இசையமைக்கிற படத்தில் நடிக்கணும். அவர் பாட்டுப் பாடி அதுக்கு நான் வாய் அசைச்சு டான்ஸ் ஆடணும்னு பலமுறை கனவு கண்டிருக்கேன். இந்தப் படத்தின் மூலமா அது நிறைவேறிடுச்சு. மொத்தம் மூணு பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சிடுச்சு.
அவரை மீட் பண்ணும்போது நான் எதுவுமே பேசலை. எல்லோரும் படத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாங்க. ஆனா, அங்க நான் பர்சனலா ரொம்ப எமோஷனலாகி உட்கார்ந்திருந்தேன். எங்க அப்பாவுக்கு ரஹ்மான் சாரை ரொம்பப் பிடிக்கும். இந்தத் தருணத்துல ரஹ்மான் சார்கூட நான் பேசுறதை எங்க அப்பா எங்கயோ இருந்து பார்த்துட்டிருக்கார்னு நினைச்சு, அவர் பேசுறதை அமைதியா வேடிக்கை பார்த்துட்டிருந்தேன். அடுத்தமுறை ரஹ்மான் சார்கிட்ட நிறைய பேசணும்.’’
“மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு!”
``இந்த வருஷத்தோட பெரிய ஹிட் படங்களில் ஒன்று ‘நம்ம வீட்டுப் பிள்ளை.’ இந்தப் படத்துக்கு முன்னாடி உங்களோட சில படங்கள் சரியாப் போகல. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திட்டமிட்டுப் பண்ணிய படமா?’’
`` ‘ஹீரோ’ படத்துக்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பிச்சு, வில்லன் மட்டும் முடிவாகாமல் இருந்தது. அப்போ பாண்டிராஜ் சார் என்னைச் சந்திச்சு `ஒரு படம் பண்ணலாம். 7 நாள் கால்ஷீட் கொடுங்க. குழந்தை களுக்கான படமா இதை எடுத்துடலாம்’னு சொன்னார். அந்தக் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சது. ஆனா, போன வருஷம் வந்த `கடைக்குட்டி சிங்கம்’ செம ஹிட். `இந்தக் கதையை எப்போ வேணாலும் பண்ணலாம். கடைக்குட்டி ஃப்ளேவர்ல ஒரு படம் பண்ணுங்க சார்’னு சொன்னேன். இப்படித்தான் `நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆரம்பிச்சது. என் சில படங்கள் நல்லாப் போகலைன்னு சொன்னீங்க. ஆனா, நீங்க குறிப்பிட்ட படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்கள்தான். கன்டென்ட்லதான் இன்னும் கூடுதலா கவனம் தேவைப்படுது.’’
``தொடந்து உங்களுடைய படங்கள் எல்லாம் ரிலீஸின்போது சிக்கல்களைச் சந்திக்கிறதே?’’
``அதைத் தடுக்கவே முடியாது. இந்தப் பிரச்னை எந்தப் படத்துல இல்லை, சொல்லுங்க. தயாரிப்பாளர்களின் முந்தைய படங்களில் சில சிக்கல்கள் ஏற்படும்போது, அது அடுத்து பண்ற படங்களையும் பாதிக்குது.’’
``உங்களுடைய தயாரிப்பாளர் பயணம் எப்படிப் போயிட்டிருக்கு?’’
``நடிப்புல சில விஷயங்கள் கத்துக்குற மாதிரி, தயாரிப்புலயும் கத்துக் கிட்டிருக்கேன். இருந்தாலும் சின்னச் சின்ன விரயங்கள் நடந்துட்டுதான் இருக்கு. இதை டைம்தான் நமக்குச் சொல்லித் தரும்னு நினைக்கிறேன். நிறைய விஷயங்கள்ல இறுதி முடிவு எடுக்கக்கூடிய சுதந்திரம் எனக்கு இருக்கு. அந்த முடிவு வெற்றியா மாறும்போது ஒரு நம்பிக்கையையும் கொடுக்குது. சரியான திட்டமிடல் இருந்தா வெற்றி கிடைக்கும்.
Sivakarthikeyan
Sivakarthikeyan
என் தயாரிப்புல மூணாவது படம் ‘அருவி’ படத்தை இயக்கிய அருண் பிரபு எடுத்திட்டிருக்கார். படம் பெயர் `வாழ்.’ சிவகார்த்திகேயன் தயாரிப்பு மூலமா இந்தப்படம் வர்றது எங்களுக்குப் பெருமை.’’
``கமர்ஷியல் படங்கள்தான் உங்கள் ஏரியா... திடீர்னு சூப்பர் ஹீரோ, சயின்ஸ் ஃபிக்ஷன்னு வேறு வேறு ஜானர்கள்ல படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே?’’
``எல்லோரையும் சந்தோஷப்படுத்துற கமர்ஷியல் படங்கள் மட்டும்தான் நான் பண்றேன். அதில் வெவ்வேறு ஜானர்களை எடுத்துக்குறேன். நம்மளை மூலதனமா வெச்சு போடப்படுற பணத்தை, தயாரிப்பாளர் திரும்ப எடுக்கணும். இதுதான் என் கணக்கு. இதுக்குள்ள ஸ்பெஷலா என்ன பண்ண முடியும்ங்கிறது மட்டும்தான் நான் பார்க்குறேன். என்னுடைய சம்பளத்தையும் இதை வெச்சுத்தான் நான் தீர்மானிக்கிறேன்.’’
``குறுகிய காலத்துல `மாஸ் ஹீரோ’வா முன்னுக்கு வந்துட்டீங்க . இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?’’
``டபுள் ஹீரோ படங்கள், மாஸ் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோன்னு மத்த ஹீரோக்களுக்கு இருக்கிற மாதிரியே எனக்கும் ஆசை இருக்கு. டிவியில் காமெடி பண்ணிட்டு, அப்புறம் சினிமாக்குள்ள வந்ததால அந்தக் காமெடி இமேஜை உடைச்சிட்டு, கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே மாத்திக்கிறது ரொம்பவே சவாலா இருக்கு. ரசிகர்கள் 50 சதவிகிதம் பழசை எதிர்பார்த்து வருவாங்க, 50 சதவிகிதம், `இதைத்தான் நான் பார்த்துட்டேனே... வேற ஏதாவது பண்ணு’ங்கிற எதிர்பார்ப்புல வருவாங்க. இதை பேலன்ஸ் பண்றதுக்குத்தான் கொஞ்ச காலம் தேவைப்பட்டது. நீங்க மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு!’’

‘`தமிழ் சினிமாவின் போக்கு எப்படி இருக்கு?’’
‘`மக்களுக்குப் பிடிச்ச படங்கள் பண்ணும்போது தியேட்டருக்குக் குடும்பமா வந்து பார்க்குறாங்க. இதுக்கு இன்னொரு காரணம் தியேட்டர்ஸ். சின்னச் சின்ன ஊர்களில்கூடத் தரமான தியேட்டர்கள் இப்போ வந்திருக்கு. கொடுக்குற காசுக்கு ஏற்ற அனுபவம் தியேட்டர்கள்ல கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு. புது இயக்குநர்கள், புதிய ஐடியாக்கள், நிறைய ஜானர்களில் படங்கள் என, தமிழ் சினிமா இப்ப ரொம்பவே நல்லாருக்கு.’’
‘`தனுஷ் உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். ‘அசுரன்’ படத்தில் அவருடைய நடிப்பு ரொம்பவும் பாராட்டப்பட்டது. படம் பார்த்தீங்களா?’’
“தனுஷ் சார் பக்கத்துல இருந்து அவர் நடிப்பைப் பார்த்திருக்கேன். அவரோட முகத்துல சின்னச் சின்ன ரியாக்ஷன்ஸ் சேஞ்ச் ஆகுறதை ‘3’ படத்துல எதிர்ல நின்னு பார்த்திருக்கேன். ‘மத்தவங்களுக்கு முன்னாடி உங்க நடிப்பை நான் பார்த்துடறேன் சார்’னு அவர்கிட்ட சொல்லுவேன். இந்தியாவோட சிறந்த நடிகர்களில் தனுஷ் சார் முக்கியமானவர். அதுக்கு இன்னொரு உதாரணம்தான் ‘அசுரன்’னு நினைக்கிறேன். யார்கிட்டயும் சாத்தியப்படாத நடிப்பு மொழியும், உடல் மொழியும் தனுஷ் சார்கிட்ட இருக்குன்றது ‘காதல் கொண்டேன்’ படத்திலிருந்தே தெரியும். அது இன்னும் இன்னும் அடுத்தடுத்த லெவலுக்குப் போயிட்டே இருக்கு.’’

0 Comments