பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பாலா சிங் மாரடைப்பால் தனது 67வது வயதில் காலமானார்.

நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின.
nadigar maranam

அந்த வகையில் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, இவரை குடும்பத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

பாலா சிங்குக்கு தங்கலீலா என்ற மனைவியும், ஓசின் என்ற மகளும், சிபின் என்ற மகனும் இருக்கிறார்கள். அவரின் திடீர் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாலா சிங்கின் வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலையில் அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளது.