இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்ப்பது நமது தமிழ்படங்கள், என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் வெற்றி விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி; உலகப் படங்களுக்கு நிகராக தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. உலகப் படங்களுக்கு நிகராக தமிழ்ப் படங்கள் எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆரின் திரைப்பட வெற்றிக்கு நாடகப் பயிற்சியே காரணம். இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை.

mgr


நகைச்சுவை படங்களை பார்க்கும் போது மனதிலுள்ள கவலைகள் நீங்கும். உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களைத் தருபவர்கள் தமிழ்த் திரையுலகினர் என முதல்வர் பழனிசாமி புகழாரம் என புகழாரம் சூட்டினார். தீய கருத்துகளை பரப்பும் வகையிலான படங்களை எடுக்க வேண்டாம் என திரையுலகினருக்கு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தீய பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க கூடாது. எம்ஜிஆரை போன்று நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் வெற்றி விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு; எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் முதல்வர் பழனிசாமி தான் சினிமா துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி என கூறியுள்ளார்.